×

வேறு நபருடன் பேசியதால் ஆத்திரம்!: புதுச்சேரி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசிய காதலன்..!!

புதுச்சேரி: வேறு நபருடன் காதலி பேசியதால் ஆத்திரமடைந்த காதலன், காதலியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி அடுத்த சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் பொறையூர்பேட் பகுதியில் உள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ராஜஸ்ரீ உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரதீஷ் என்பவரை ராஜஸ்ரீ காதலித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே ராஜஸ்ரீ வேறு ஒரு நபருடன் பேசி வந்ததாக சந்தேகமடைந்த பிரதீஷ், பொறையூர்பேட் மயானத்திற்கு வரவழைத்து ராஜஸ்ரீயிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் தீவிரமடைந்ததில் தனது தம்பியின் உதவியுடன் ராஜஸ்ரீயை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளது அம்பலமாகியுள்ளது.

தொடர்ந்து, தனிப்படை போலீசாரிடம் காதலன் பிரதீஷ் சிக்கிய நிலையில், 14 வயதே நிரம்பிய அவரது தம்பியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வேறு நபருடன் பேசிய காரணத்தினால் கல்லூரி மாணவி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Vuachcheri , Puducherry, college student, sack bundle, boyfriend
× RELATED புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்...