புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாட்டால் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றனர். ரெம்டெசிவர் மருந்தை வெளியே வாங்கிக்கொள்ளுமாறு நோயாளிகளுக்கு ஜிப்மர் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாலா அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த புதுச்சேரி நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் முக்கியமான பகுதிகளில் சமுதாய நலக்கூடங்களில் கொரோனா கேர் வார்டும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டு பகுதியில் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த 10,000 க்கு மேற்பட்ட நோயாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நோயாளிகள் ஏழை மற்றும் கூலித்தொழிலாளிகள் ஆவர். தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மற்ற சிகிச்சைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அவசர அறுவை சிகிச்சை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. ஜிப்மர் மருத்துவமனை கோவிட் மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு ரெம்டெசிவர் மருந்து அளிக்கப்படுகிறது. இந்த மருந்தை செலுத்தினால் தான் அவர்கள் தங்களது உயிரை பாதுகாக்க முடியும். ஆனால் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மரில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.

இங்கு ரெம்டெசிவர் மருந்து கிடையாது. எனவே வெளியில் வாங்கி கொண்டு வருமாறு மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுதி தரும் நிலை தான் தற்போது புதுச்சேரியில் நிலவி வருகிறது. இந்த மருந்து வெளியில் கிடைப்பதில்லை. இந்த மருந்தை வெளியே விற்கக்கூடாது என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர். புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு கிடையாது என்று ஆளுநர் தமிழிசை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

Related Stories:

>