ஏழைகளுக்கு எட்டா கனியாகுமா தடுப்பூசி?: கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கும் மத்திய அரசின் முடிவால் விலை எகிறும் அபாயம்..!!

டெல்லி: கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கும் மத்திய அரசின் முடிவால் அதன் விலை பல மடங்கு உயர்ந்து ஏழைகளுக்கு எட்டா கனியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்களே நேரடியாக கொள்முதல் செய்யவும், வெளிச்சந்தையில் தடுப்பூசிகளை விற்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 3வது கட்ட தடுப்பூசி திட்டத்தில் முதல் 30 கோடி பேருக்கு மட்டுமே மத்திய அரசின் இலவச தடுப்பூசி கிடைக்கும். அதன் பின்னர் மத்திய அரசின் 50 சதவீத ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பெறும் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தடுப்பூசிக்கு மாநில அரசுகள் மானியம் அளிக்க முன்வராவிட்டால் அந்த சுமை மக்களின் தலையிலேயே விழும் அபாயம் எழுந்துள்ளது. வரிகளை தவிர்த்து தற்போது கோவிஷீல்டு ஒரு டோஸ் 150 ரூபாய்க்கும், கோவாக்சின் ஒரு டோஸ் 206 ரூபாய்க்கும் மத்திய அரசு வாங்கி வந்தது. இதில் லாபம் கிடைத்தாலும் கூடுதல் லாபம் இல்லை என்று தடுப்பூசி நிறுவனங்கள் அதிருப்தி தெரிவித்து வந்ததன் காரணமாகவே தடுப்பூசி விற்பனை தாராளமயமாக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு டோஸ் தடுப்பூசி 1000 ரூபாய் வரை விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஏழை மக்களுக்கு கொரோனா தடுப்பூசி எட்டா கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் 2ம் அலை அதிதீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வு தடுப்பூசி என விஞ்ஞானிகள் தெரிவித்ததனால் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தங்களுடைய மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா தடுப்பூசி விற்பனையை தாராளமயமாக்கும் மத்திய அரசின் முடிவால் தடுப்பூசி விலை எகிறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: