தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 472 அதிகரித்து சவரன் ஒன்று ரூ. 36 ஆயிரத்தை தாண்டியது : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

சென்னை: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது. தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் விலை அதிகரித்தால், மறுநாள் விலை குறைவதுமான நிலையும் இருந்து வந்தது. கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ.35,624க்கு விற்கப்பட்டது. 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை.

அதனால், தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் சனிக்கிழமையை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. கிராமுக்கு ரூ.42 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,495க்கும், சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு சவரன் ரூ.35,960க்கும் விற்கப்பட்டது.

அதே நேரத்தில் பவுன் 36 ஆயிரத்தை நெருங்கி வந்தது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நேற்று காலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.472 உயர்ந்தது.இன்று கிராமுக்கு ரூ.59 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,506க்கும், சவரனுக்கு ரூ.472 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையின் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: