ஐகோர்ட் நீதிபதிகள் 2 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை உயர்நீதி மன்றத்தை சேர்ந்த 2 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நீதிபதிகள் மட்டும் வழக்குகளை நேரடியாக விசாரித்து வருகிறார்கள். வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள் மற்றும் அரசு வக்கீல்கள் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் தலைமை நீதிபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தற்போது, 2 நீதிபதிகள் கொரோனா தொற்று காரணமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள் நோயாளியாக நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Stories: