பஸ்சில் செல்பவரா... உஷாராக திட்டமிடுங்கள்... நள்ளிரவில் தவிக்காதீர்... தென், மேற்கு, வட மாவட்டங்களுக்கு சென்னையிலிருந்து கடைசி பஸ் எப்போது? பட்டியல் முழு விவரம்; வீட்டிற்கு 9 மணிக்குள் செல்ல திட்டம் தேவை

சென்னை: இரவு நேர ஊரடங்கை அடுத்து, சென்னையில் இருந்து வெளியூருக்கு கடைசி பேருந்து எப்போது இயக்கப்படுகிறது என்ற விவரம் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரிக்கு காலை 6 மணிக்கும், நெல்லை, தூத்துக்குடிக்கு காலை 8 மணிக்கும் கடைசி பஸ் இயக்கப்படுகிறது. அதே நேரம் கடைசி பஸ்களில் இரவு 9 மணிக்கு செல்ல முடியாது. நெடுந்தூர பஸ்களின் இயக்கம் மதியத்தோடு நிறுத்தப்படுகிறது. இரவில் பஸ்சை விட்டு இறங்கும்போது வீடு, உறவினர்கள், லாட்ஜ் புக்கிங் செய்துவிட்டு செல்லவும். இரவில் பஸ்சை விட்டு இறங்கினால் மறு நாள் காலை வரை பஸ் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை நேற்று முதல் அமல்படுத்தி உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை அடுத்து இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் மட்டும் பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பஸ்கள் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடைகிற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இரவு மணிக்கு கடைசி பஸ் என்று பொதுமக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். சென்னையில் இருந்து புறப்படும் பஸ் இரவு 8 மணியளவில் நாகர்கோவிலை அடையும் வகையில் காலை 7 மணிக்கு இறுதி பஸ் புறப்படும். அதற்கு முன்பாக காலை 4.30 மணி முதல் நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும். இரவு 9 மணிக்கு வெளியூர் செல்பவர்களுக்கு அதற்கு மேல் பஸ்கள் இல்லை. மறுநாள் காலையில் 4.30 மணிக்கு மேல் தான் துவங்கும். எனவே, பொதுமக்கள் தங்கவோ அல்லது நேரடியாக வீட்டிற்கு சென்று சேரும் வகையில் பயணத்தை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இரவு நேரத்தில் கொசுக்கடியில் பஸ் நிலையத்தில் தவிக்க வேண்டாம்.

Related Stories: