ராகுலுக்கு தொற்று உறுதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்குக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து ராகுலுக்கும் தொற்று உறுதியானது. இது குறித்து ராகுல் தனது டிவிட்டரில், ‘லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதித்ததில் எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அண்மையில் என்னை சந்தித்தவர்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்,’ என்றார். ராகுல் விரைவில் பூரண நலம் பெற பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வேண்டியுள்ளனர். டாக்டர்கள் அறிவுரைப்படி ராகுல் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories:

>