சதித் திட்டம் தீட்டுவதில் குறியாக இருந்தார் மோடி: மம்தா குற்றச்சாட்டு

முர்ஷிதாபாத்: கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு குறைந்த பிறகு வெளிச்சந்தை விற்பனைக்கு பிரதமர் மோடி அனுமதித்து உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்ற்ம்சாட்டி உள்ளார். அடுத்த மாதம் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இம்மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் போதுமான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காமல் போராடிக் கொண்டு இருந்த நேரத்தில், தனது நற்பெயரை வளர்த்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி கொரோனா தடுப்பு மருந்துகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு மருந்து இருப்பு குறைந்தது. மருந்து இருப்பு குறைந்த பின்னர் வெளிசந்தைகளில் கொரோனா தடுப்பு மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். வெளிச்சந்தை எங்கே இருக்கிறது? எங்கே மருந்து கிடைக்கிறது? ஏற்கனவே, நீங்கள் தடுப்பூசியின் பெரும் பகுதியை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டீர்கள். தவறான தடுப்பூசி திட்டமிடல் காரணமாக இப்போது நாம் பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம். 6 மாதமாக மத்திய அரசின் தலைமையானது, தடுப்பு மருந்து திட்டங்கள் குறித்து கவலைப்படவில்லை. மேற்கு வங்கத்தில் தேர்தல் போர் சதி திட்டத்தில் மட்டுமே சுறுசுறுப்பாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>