வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அவசியம்; தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி: கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. தூத்துக்குடியிலும் கொரோனா அளவானது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கொரோனாவானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால் ஒரு சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது வீரியம் உள்ளதாக மீண்டும் எழுந்து மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது. மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் அங்கு உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தமிழகத்திற்கும் கொரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆயினும் தமிழகத்தில் ஒரு சில அரசு மருத்துவமனைகளில் சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு என்று வதந்தி கிளம்பியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தூத்துக்குடியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளரின் முகவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்  அவசியம் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இதனால் தூத்துக்குடியில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்று தெளிவாக தெரிந்துள்ளது.

Related Stories: