கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நெட் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி உதவி பேராசிரியர்களுக்காக நடத்தப்படும் இந்த நெட் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நாடு கொரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாகவும் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு யுஜிசி சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வை இம்முறை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெட் தேர்வானது மே மாதம் 2ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படுவதற்கான தேதி 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு தான் அனைத்து தேர்வுகளையும் நடத்துவதற்கு மத்திய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக காணொலி வாயிலாக ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு தேர்வுகளையும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே இந்த தேர்வுகளை நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: