பிரெஞ்ச் ஓபனில் ஆடுகிறேன்: ரோஜர் பெடரர் உறுதி

பாரிஸ்: வரும் மே மாதம் நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆடுவேன் என்று ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் உறுதி தெரிவித்துள்ளார். முன்னாள் நம்பர் 1 வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கொரோனா பரவலின் போது, கிடைத்த ஓய்வில் அடுத்தடுத்து 2 முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் கிட்டத்தட்ட 18 மாதங்கள் அவர், டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ள அவர், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாமில் பங்கேற்கவில்லை.

கடைசியாக கடந்த 2009ம் ஆண்டு, ரோஜர் பெடரர் பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்றார். 2019ம் ஆண்டு அவர் கடைசியாக ஆடிய பிரெஞ்ச் ஓபனில், அரையிறுதியில் நடாலிடம் தோல்வியடைந்து வெளியேறினார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் இந்த ஆண்டு கத்தாரில் நடந்த டென்னிஸ் போட்டியில் மட்டுமே பங்கேற்ற பெடரர், தற்போது பிரெஞ்ச் ஓபனில் ஆட உள்ளேன் என்று உறுதி தெரிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னி போட்டிகள் வரும் மே 24 முதல்  ஜூன் 13ம் தேதி வரை பாரிசில் நடைபெற உள்ளன.

Related Stories: