வேகமெடுக்கும் கொரோனா பரவல்!: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு தொற்று உறுதி..!!

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2ம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினரும் இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து,  இந்திய தேர்தல் கமிஷனின்  24-வது தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 13ம் தேதி சுஷில் சந்திரா பதவியேற்றுக்கொண்டார். இவரது பதவிக்காலம்  2022ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. இவர், நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மீதமுள்ள சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். தற்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

சுஷில் சந்திரா மட்டுமின்றி மேலும் ஒரு தேர்தல் ஆணையரான ராஜீவ்குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தொற்று உறுதியானதை அடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். மேற்குவங்க சட்டப்பேரவைக்கான எஞ்சியுள்ள 3 கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சுஷில் சந்திரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தே தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: