முகக்கவசம் அணியாமல் பயணம் பஸ்களில் ஏறி அபராதம் வசூலித்த போக்குவரத்து போலீசார்

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா விதிமீறல்களில் ஈடுபடுவோரிடம் காவல்துறை அபராதம் வசூலித்து வருகிறது. அதன்படி சட்டம்- ஒழுங்கு காவல் துறையினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே சோதனை நடத்தி முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கின்றனர்.

 தினமும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு 20 பேரிடம் அபராதம் வசூலிக்க ரகசிய உத்தரவு தலைமையிடம் இருந்து பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே புதுச்சேரி டிராபிக் போலீசாரும், தற்போது அபராத வசூலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நேருவீதி, புஸ்சி வீதி, இசிஆரில் வந்த பஸ்களை கிழக்கு டிராபிக் காவல் சரக எஸ்ஐ வேலு தலைமையிலான போலீசார் ஆங்காங்கே நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது பஸ்சில் முகக்கவசம் அணியாமல் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களிடம் அபராதம் வசூலித்தனர். குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட சிலரை எச்சரித்து அனுப்பினர். இதேபோல் பஸ் நடத்துனர், டிரைவர்களுக்கும் டிராபிக் போலீசார் ஆலோசனை வழங்கினர்.

Related Stories: