ஹங்கேரியில் களை கட்டுகிறது தடுப்பூசி கேக் விற்பனை!: ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா கேக் வகைகளுக்கு மக்கள் வரவேற்பு..!!

வெர்சேகிஹஸ்: கொரோனா தடுப்பூசிகளின் பெயர்களில் தயாரிக்கப்பட்டுள்ள இனிமையான கேக் வகைகள் ஹங்கேரியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியாக இவை கையாளப்பட்டுள்ளது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கி தவித்தாலும் அந்த கொல்லுயிரியை அடிப்படையாக வைத்து பணம் பார்க்கும் கூட்டமும் பெருக தான்  செய்கிறது. அதில் சமீபத்தில் இணைந்துள்ளது ஹங்கேரியில் உள்ள கேக் ஷாப் ஒன்று.

இந்த கேக் வகைகளுடன் சேர்த்து சாப்பிடும் இனிப்பு சாஸ் வகைகளுக்கு ஃபைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனிகா போன்ற கொரோனா தடுப்பூசிகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் கேட்கும் சாஸ் வகை, தடுப்பூசியை போல ஊசியை கொண்டே கேக் வகைகளில் செலுத்தப்படுகிறது. இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் கேட்டலின் பென்கோ தெரிவித்ததாவது, நாட்டில் கிடைக்கும் தடுப்பூசிகளை மக்களுக்கு தெரிவிக்கவே இந்த வித்யாசமான முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்த இனிப்பு போலவே தடுப்பூசியும் பக்க விளைவுகள் இல்லாதது என்பதை மக்களுக்கு நாங்கள் உணர்த்த விரும்பினோம்.

அனைவரும் இந்த கேக் வகைகளை முயற்சிக்கலாம். நிச்சயம் இவை உங்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வரும் என தெரிவித்தார். பேக்கரி உரிமையாளரின் இந்த வித்யாசமான சிந்தனை வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க தொடங்கியிருக்கிறது. உலகில் உள்ள பலரும் கொரோனா தடுப்பூசியை வலியுடன் போட்டுக்கொள்ளும் நிலையில் ஹங்கேரியில் தடுப்பூசி பெயர்களை கொண்ட இனிப்பு வகைகளை மக்கள் ருசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related Stories:

>