மின்னல் தாக்கி தென்னை மரத்தில் தீ கம்பம் கோயிலில் பரபரப்பு

கம்பம் : கம்பத்தில் உள்ள கம்பராயப்பெருமாள் கோயில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்பத்தில் பிரசித்தி பெற்ற கம்பராயப்பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.  நேற்று மாலை கம்பத்தில் இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் சிவன் கோயில் கொடிமரம் அருகே இருந்த தென்னை மரத்தின் உச்சியில் தீப்பிடித்தது.

இதனால், கோயிலில் இருந்த பக்தர்கள் சிதறி ஓடினர். மரம் கொழுந்து விட்டு எரிந்ததால், அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில், கம்பம் தீயணைப்பு நிலைய அதிகாரி அழகர்சாமி தலைமையில் வந்த தீயணைப்பு துறையினர் தென்னை மர உச்சியில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என தெரிவித்து விட்டுச் சென்றனர். இதனால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு  ஏற்பட்டது.

Related Stories:

>