புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தியேட்டர்களில் தொடர்ந்து திரைப்படங்களை திரையிட முடிவு

சென்னை: புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தியேட்டர்களில் தொடர்ந்து திரைப்படங்களை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். திரையரங்க சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் காணொலி வாயிலாக கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் தமிழக அரசின் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, நேரங்களை மாற்றி அமைக்கலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய திரைப்படங்கள் வெளியாகாத சூழலில் திரையரங்குகளை மூடி விடலாமா? அல்லது நேரங்களை மாற்றி அமைக்கலாமா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

மால்களில் உள்ள திரையரங்குகளில் காலை 9 மணிக்கு முதல் காட்சியும், 4வது காட்சியை 6 மணிக்கு திரையிடலாம் என திட்டமிட்டிருந்தனர். தற்போதைய சூழலில் அரசின் விதிகளுக்கு உட்பட்டு 3 காட்சிகள் மற்றும் தற்போது திரையிடலாம் என்று திட்டமிட்டுள்ளனர். தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. கர்ணன், சுல்தான் ஆகிய இரண்டு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அடுத்த திரைப்படங்கள் வெளியாகும் வரை இந்த திரைப்படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories:

>