டெல்லியில் 144வது நாளாக போராட்டம் : வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்

டெல்லி : மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி கடந்த 143 நாட்களாக ஹரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லைகளான சிங்கு, டிகிரி, காசிப்பூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களின் மூலம் சட்டங்களின் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காது என்பது குற்றச்சாட்டாகும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அங்கு நேற்று  இரவு 8 மணி முதல் வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் விவசாயிகள் இன்று 144-வது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.டெல்லியின் எல்லைகள் முதல் நாட்டின் பிற பகுதிகள் வரை விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் போதுதான் விவசாயிகளின் போராட்டங்கள் முடிவடையும் என்று போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் விவசாயிகள் சங்க அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>