இந்தியாவில் காட்டுத் தீயாய் பரவும் கொரோனா வைரஸ் : பலியானோர் எண்ணிக்கை 1.80 லட்சத்தை தாண்டியது!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.80 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 53 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,59,170 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக உயர்ந்தது.

* புதிதாக 1,761 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20,31,977 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 12,71,29,113 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: