கொரோனா வேகமாக பரவி வருவதால் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்..!

வாஷிங்டன்: கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு உள்ளிட கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொரோனாவில் கோரத்தாண்டவம் குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் அமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம், இந்திய பயணத்தை தவிர்க்க வேண்டும் என பயணிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி போட்டிருந்தாலும் பயணம் செய்வது அபாயத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக செல்வதாக இருந்தால் இந்தியா செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: