அமெரிக்கா, பிரேசிலில் ருத்ரதாண்டவம்.. விடாமல் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள் : திகைக்கும் உலக நாடுகள்!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.11கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.26 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 108,160-க்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 32,475,043 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 581,542 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இந்தியா இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 256,947 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1,757 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தம் 15,314,714 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 180,550 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 34,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் 13,977,713 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை 375,049 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். ரஷ்யா பிரேசிலில் மிக மோசமாக ஒரே நாளில் 1953 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மொத்தம் 4,710,690 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 105,928 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

Related Stories: