×

துபாய் விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை  சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுபர் சாதிக் (30), முகமது அப்பாஸ் (20) ஆகிய 2 பயணிகளை  சோதனையிட்டனர். இருவருடைய உள்ளாடைகளுக்குள்ளும் தங்க பேஸ்ட் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.  இருவரிடமிருந்து 33.4 லட்சம் மதிப்புடைய 687 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். அதோடு இருவரையும் கைது செய்தனர்.

Tags : Dubai , Dubai flight, gold, arrest
× RELATED வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில்...