புரசைவாக்கத்தில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை ஊழியர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று: கடைக்கு சீல்

சென்னை: புரசைவாக்கத்தில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் 26 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால்  மாநகராட்சி அதிகாரிகள் நேற்று கடையை மூடி சீல் வைத்தனர். இது, கடைக்கு வந்து சென்ற பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை கொரோனா  விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

புரசைவாக்கத்தில் இயங்கி வரும் பிரபல துணிக்கடையில் 165க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த வார இறுதியில்  மாநகராட்சி சார்பில், இந்த துணிக்கடையில் காய்ச்சல் அறிகுறி உள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கடந்த  சனிக்கிழமை 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. அதைதொடர்ந்து 13 ஊழியர்களும் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊழியர்கள் அனைவருக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது.  பரிசோதனை முடிவு நேற்று வந்தது. அதல் கூடுதலாக 26 ஊழியர்களுக்கு தொற்று இருந்தது உறுதியானது. அந்த 26  ஊழியர்களும் தண்டையார்பேட்டையில் உள்ள அரசு தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ேமலும், கடை முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து, தொற்று பரவ காரணமாக இருந்ததாக கூறி அந்த  துணிக்கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர். இந்த தகவல் ெவளியே பரவியதால் அந்த  துணிக்கடைக்கு வந்து சென்ற பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். மேலும், கடைக்கு வந்து சென்ற பொதுமக்கள் விவரங்களையும் மாநகராட்சி  அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் புரசைவாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: