மரக்காணம் கலவர வழக்கில் அன்புமணிக்கு பிடிவாரன்ட்: செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாமல்லபுரம் சித்திரை திருவிழா தொடர்பான வழக்கில் ஆஜராகாத அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் உள்பட 6 பேர் மீது பிடிவாரன்ட்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாமல்லபுரம் கடற்கரையில் சித்திரை முழுநிலவு திருவிழா  என்ற பெயரில் மாநாடு நடைபெறும். கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் 25ம்தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் திருவிழாவில் கலந்துகொள்ள  வந்த பாமகவினர், மரக்காணம் புதுப்பட்டினம் வாயலூர் பகுதியில் சென்றபோது வன்முறைம் ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் இருந்த பல வீடுகள்  எரிக்கப்பட்டது; சூறையாடப்பட்டது. இதன் பிறகு அன்று மாலை மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞர்  அணித்தலைவர் அன்புமணி,  காடுவெட்டி குரு, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அரசு மற்றும் போலீசாரின் தடையை மீறி கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அனுமதித்த நேரத்தை மீறி கூட்டம் நடைபெற்றதாகவும், கலவரத்தை  தூண்டியதாகவும் அரசு உத்தரவை மீறியதாகவும் மாமல்லபுரம் போலீசார் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.மணி, காடுவெட்டி குரு,  திருகச்சூர் ஆறுமுகம், ஏ.கே.மூர்த்தி, பாமக நிர்வாகிகள் கணேசன், அரசகுமார், நாகராஜ் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு விசாரணை  மேற்கொண்டனர். இந்த வழக்கு விசாரணை திருக்கழுக்குன்றம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்  எம்.பி., எம்.எல்ஏக்களாக உள்ளதால் கடந்த வருடம் இந்த வழக்கு செங்கல்பட்டு முதலாவது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கினை  நீதிபதி காயத்திரிதேவி விசாரித்து வந்தார். வழக்கு விசாரணைக்கு தொடர்புடையவர்கள் தொடர்ந்து ஆஜராகவில்லை.

இதனிடையே வழக்கில் தொடர்புடைய காடுவெட்டி குரு இறந்தார். இதனால் கடந்த 15ம்தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராமதாஸ் உள்ளிட்ட  8 பேரும் ஆஜராகவில்லை. இது குறித்து நீதிபதி கேட்டபோது அடுத்த விசாரணையில்  ஆஜராவதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.  இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி காயத்திரிதேவி முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது அப்போதும் 8 பேரும்  ஆஜராகவில்லை. இது குறித்து நீதிபதி கேட்டபோது ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகாததற்கு விலக்கு கோரி மனு அளித்தனர்.

இதை கேட்ட நீதிபதி தொடர்ந்து பலமுறை இவர்கள் வழக்கிற்கு ஆஜராகவில்லை உடனடியாக ஆஜர்படுத்தவேண்டும். இல்லையென்றால் பிடிவாரன்ட்  போடுவேன் என்றார். பின்பு மாலைக்குள் ஆஜர்படுத்தவேண்டும் என்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். நேற்று மாலை இந்த வழக்கு மீண்டும்  விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ திருக்கச்சூர் ஆறுமுகம் மட்டும் ஆஜரானார்.  

ராமதாசுக்கு 89வயது ஆவதாலும் கொரோனா காலம் என்பதால் வரமுடியவில்லை என்று மருத்துவ சான்று கொடுத்தனர். மற்ற 6 பேருக்கும் மனு  அளித்தனர். இதை கேட்ட நீதிபதி ராமதாஸ் மனுவினை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்ற ஆறுபேரின், மனுவை தள்ளுபடி செய்தார்.மேலும், அன்புமணி,  ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, கணேசன், அரசகுமார், நாகராஜ் ஆகியோருக்கு  பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். வரும் 19.5.2021 அன்று  ஆறுபேரையும் கைது செய்து நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மாமல்லபுரம் போலீசுக்கு நீதிபதி காயத்திரிதேவி உத்தரவிட்டார்.

வழக்கில் தொடர்புடைய முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம் மட்டும் ஆஜரானார். ராமதாசுக்கு 89வயது ஆவதாலும் கொரோனா காலம்  என்பதால் வரமுடியவில்லை என்று மருத்துவ சான்று கொடுத்தனர்.

Related Stories: