கொரோனா பரவலால் உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்காத முலாயம்சிங்

எடாவா: உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடந்த பஞ்சாயத்து தேர்தலில் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் வாக்களிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. 20 மாவட்டங்களில் மொத்தமுள்ள 2.23 லட்சம் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இந்த தேர்தலில் 3.48 லட்சம் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 3.23கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்நிலையில் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக முலாயம் சிங் யாதவ்(81). இவர் இதுவரை ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் வாக்களிக்க தவறியதில்லை. குடும்பத்தினரின் வேண்டுக்கோளுக்கிணங்க பஞ்சாயத்து தேர்தலில் நேற்று முலாயம் சிங் வாக்களிக்கவில்லை. இது குறித்து முலாயம் மகன் தர்மேந்திர யாதவ் கூறுகையில்,‘‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, முலாயம் ஜீயை பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என குடும்பத்தினர் கேட்டுக்கொண்டோம். அதிர்ஷ்டவசமாக அவர் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது அவர் டெல்லியில் தங்கியிருக்கிறார்” என்றார்.

Related Stories:

>