போலி சான்றிதழில் 10 ஆண்டுகள் பணி அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்

நெமிலி: நெமிலியில் போலி சான்றிதழ் கொடுத்து 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வீதி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி என்பவர் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். பின்னர், 2016ல் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு தற்போது வரை பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவரது மதிப்பெண் சான்றிதழ்கள் பரிசோதனைக்காக கடந்த மாதம் கல்வித்துறை மூலம் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த சுமதியை சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை மாவட்ட சிஇஓ மதன்குமார் உத்தரவிட்டார்.

Related Stories: