அனுமதியற்ற சிலைகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

மதுரை: தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ பல இடங்களில் தலைவர்களின் சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சிலைகளால் சமூக ஒற்றுமை பாதிக்கிறது. அந்த சிலைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘அனுமதியற்ற சிலைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

Related Stories:

>