×

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இன்றுமுதல் இரவு நேர ஊரடங்கு அமல்: கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியிலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கவர்னர் தமிழிசை அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நோயின் 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக லாஸ்பேட்டை தொல்காப்பியர் சாலையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த, தொற்று பரவலின் தீவிரத்தை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என மண்டலங்கள் பிரித்து அதற்கேற்ப பணியாற்ற முடிவு செய்திருக்கிறோம். தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். பாண்லே பூத்களில் மானிய விலையில் முகக்கவசம் வழங்கப்படும். அதேபோல சானிடைசரும் வழங்கப்படும். கடற்கரை சாலை காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டல்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படும். அதன்பிறகு பார்சல் மட்டும் வழங்கப்படும். 20ம் தேதி(இன்று) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். வழிபாட்டு தலங்களில் நேரக்கட்டுப்பாடு விதிக்க மத தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Pondicherry , Night curfew imposed in Pondicherry to control corona infection: Governor orders
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...