28 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனா 11 ஆயிரத்தை நெருங்கியது: ஒரே நாளில் 44 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. நேற்று மட்டும் 10,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 44 பேர்  உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,11,590 பேருக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது. இதில் 10,941 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக நேற்று சென்னையில் மட்டும் 3,347 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 75,116 ஆக உயர்ந்துள்ளது. மொத்த  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,02,392 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 6,572 பேர் ஆண்கள், 4,369 பேர் பெண்கள். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 6,172 பேர் நேற்று குணமடைந்து  வீடு திரும்பினர். இதேபோல், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 44 பேர் நேற்று உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 15  பேர் நேற்று உயிரிழந்தனர். நேற்றைய மொத்த பாதிப்பில் சென்னையை அடுத்து செங்கல்பட்டு 970, கோவை 735, கடலூர் 200, தர்மபுரி 146,  திண்டுக்கல் 160, ஈரோடு 248, கள்ளக்குறிச்சி 121, காஞ்சிபுரம் 240, கன்னியாகுமரி 157, கிருஷ்ணகிரி 287, மதுரை 328, நாகப்பட்டினம் 125, நாமக்கல்  124, ராணிப்பேட்டை 169, சேலம் 359, தென்காசி 162, தஞ்சாவூர் 217, திருப்பத்தூர் 105, திருவள்ளூர் 535, திருவண்ணாமலை 170, தூத்துக்குடி 288,  திருநெல்வேலி 286, திருப்பூர் 296, திருச்சி 303, வேலூர் 167, விழுப்புரம் 110, விருதுநகர் 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

10 லட்சம் பேர் பாதிப்பு

தமிழகத்தில் 12 வயதிற்குள் ஆண்கள் 17,265, பெண்கள் 18,559 என மொத்தம் 36,324 பேரும், 13-60 வயதிற்குள் ஆண்கள் 4,99,130, பெண்கள் 3,27,171  மற்றும் திருநங்கைகள் 36 என மொத்தம் 8,26,337 பேரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆண்கள் 88,252, பெண்கள் 51,479 என மொத்தம் 1,39,731 பேர்  என 10,02,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இணை நோய் இல்லாத உயிரிழப்புகள்

தமிழகத்தில் தற்போது இணைநோய் எதுவும் இல்லாமல் உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் கன்னியாகுமரி  மாவட்டத்தில் 28 வயதுடைய பெண், எந்த விதமான இணை நோயும் இல்லாமல் உயிரிழந்துள்ளார்.

Related Stories: