தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் - டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. சுற்றறிக்கையில் மாலை 5 மணிக்கே மதுக்கடைகள் மூடப்படும் என தவறாக அச்சிடப்பட்டுவிட்டது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மீண்டும் டோக்கன் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை டோக்கன் விநியோகிக்க வேண்டும் என்று மதுக்கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஞாயிறு முழு ஊரடங்கு தினத்தில் மதுக்கடைகள் முழுமையாக செயல்படாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>