மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட்

செங்கல்பட்டு: மரக்காணம் கலவர வழக்கில் ஆஜராகாத அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 6 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6 பேரையும் மே 15 வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செங்கல்பட்டு போலீசுக்கு குற்றவியல் நடுவர்மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2013ல் மாமல்லபுரத்தில் பா.ம.க நடத்திய சித்திரை திருவிழாவின் போது மரக்காணத்தில் கலவரம் ஏற்பட்டது. பா.ம.க மாநாட்டுக்கு பின் மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு 6 பேரும் ஆஜராகாததை அடுத்து பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>