கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.. தேசிய அளவில் டிரெண்டாகும் #ResignModi ஹேஷ்டேக்

சென்னை: கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாத பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2.71 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதாக மத்திய அரசு அறிவித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக வெளியிடப்பட்ட தகவல் பீதியை அதிகரிக்கச் செய்தது.இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதில் வார இறுதி ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பகல் நேரங்களில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று கேட்டு #ResignModi ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியர்கள் செய்த மிகப்பெரிய தவறு அவரை இரண்டாவது முறையாக பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுத்ததுதான். அவரை இரண்டாவது முறையாக பிரதமராக்க காரணமானவர்கள் அனைவரும் குற்றவாளிகள்,

தற்போதைய நெருக்கடிக்கு சரியான பதில் மோடி ராஜினாமா செய்வதுதான். கொரோனா முடிந்துவிட்டதாக நம்மை நம்ப வைத்த நரேந்திர மோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வினியோகம் செய்ய ஆரம்பித்தார். ஆக்ஸிஜன், மருந்துகளை சேமித்து வைக்கவில்லை. இரண்டாவது அலைக்கு மோடி தயாராகவில்லை, உள்ளிட்ட கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: