கடந்த ஆண்டைப்போன்று மீண்டும் அரங்கேறும் பரிபாதக் காட்சிகள்: நெடுஞ்சாலைகளில் நடக்கத் தொடங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள்

டெல்லி: மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக வடமாநிலங்களை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி கால்நடையாக நடக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் சாரை சாரையாக பலநூறு கிலோ மீட்டர் நடந்து சென்ற பரிதாப காட்சிகளை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தற்போது அதே போன்ற காட்சிகள் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் தேசிய நெடுஞ்சாலையிலும், டெல்லியின் புறநகர் பகுதிகளிலும் பார்க்க முடிகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் புலம்பெயர் தொழிலாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி வேலை பார்த்து வந்த கூலித்தொழிலாளர்கள் உத்திரப்பிரதேசம், பீகார், சட்டீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மாற்று ஒடிசா மாநிலங்களை நோக்கி பயணித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் முன்பாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுவிட வேண்டும் என்பது இவர்களின் தவிப்பாக இருக்கிறது. இதனால் டெல்லி ரயில் நிலையங்களிலில் புலப்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Related Stories: