பிரேசிலில் உருமாறிய கொரோனாவால் உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகள்: கருவுருவதை தள்ளிப்போடுமாறு அந்நாட்டு அரசு அறிவுரை

பிரேசிலியா: கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் சூழலில் கருவுருவதையே தள்ளிபோடுமாறு நாடு ஒன்று அறிவுறுத்தியுள்ளது. உலக அளவில் உருமாறிய கொரோனா அதிகம் கண்டறியப்பட்டுள்ள நாடு பிரேசில். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் போராடு வரும் சூழலில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க பிரேசில் போராடி வருகிறது. உருமாறிய கொரோனாவின் பாதிப்பு அதிதீவிரமாக உள்ளதால் அந்நாட்டில் நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக பிறக்கும் பச்சிளம் குழந்தைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது தான் கொடுமையின் உச்சம். இதனால் அந்நாட்டு சுகாதாரத்துறை பெண்களுக்கு புதிய அறிவுரையை வழங்கி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் கருவுருவதை தள்ளிப்போடுமாறு பிரேசில் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் இந்த சூழலில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளும் கொரோனாவால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். கடந்த ஆண்டு பிரசவத்தின் போது மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்கள் தாப்ரோது கருவுற்று சில நாட்களிலேயே கொரோனா தாக்குதலுக்கு ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனாவால் கருவுற்றோர் அதிகம் பாதிக்கப்படுவதாக பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. 2 மடங்கு வேகமாக தற்போது கொரோனா பரவி வருவதால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் குறையும் வரை சில காலத்திற்கு கருவுருவதால் தள்ளிப்போடுமாறு இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு அறிவுறை வழங்கியுள்ளது.

Related Stories:

>