கோயில் வாசலை அடைத்து அமைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பெட்டி இடமாற்றம்
இதில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோயில் செல்லும் நுழைவு வாயிலையே அடைத்து மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸ் வைத்துள்ளனர். இதனால் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. இதனை வைக்கும் போதே கோயிலுக்கு செல்லும் வழியை மறைக்கும் என்று கூறியும் மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அப்பகுதி வணிகர்கள் கூறினர்.எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை பார்வையிட்டு கோயில் நுழைவு வாயிலை மறைத்து கோயிலுக்கு செல்ல முடியாத நிலையில் வைக்கப்பட்ட மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸை அகற்றி மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு மின்சார கேபிள் ஜங்ஷன் பாக்ஸை இடமாற்றம் செய்தனர். கோயில் நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்தனர். செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.