கும்பமேளாவில் பங்கேற்ற 19 கொரோனா நோயாளிகள் உத்தராகண்ட் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட்டம் :பீதியில் வடஇந்தியா!!

டெஹ்ராடூன் : கும்பமேளாவில் பங்கேற்ற நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உத்தராகண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 19 நோயாளிகள் தப்பி ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பமேளா விழா ஹரித்வார், நாசிக், உஜ்ஜைன், ப்ரக்யராஜ் ஆகிய 4 பகுதிகளில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்கான பக்தர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் டெஹ்ரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 19 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக உத்தராகண்ட் வந்தவர்கள் என்பது ம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிற மாவட்டங்களுக்கும் ராஜஸ்தான் மாநில அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உத்தராகண்ட் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: