திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் அருகே சாலையில் உள்ள பள்ளத்தால் வாகனஓட்டிகள் கடும் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவெறும்பூர் : திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை ஆகும் இந்த சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தனியார் நிறுவனம் சாலை அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர்.இந்த திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சாலையை பராமரித்து வரும் நிறுவனம் இன்னும் புதுப்பிக்கவில்லை.சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. பராமரிப்பு பணி கூட சரிவர செய்யப்படுவது இல்லை.

சாலையின் இருபுறத்திலும் சுமார் ஐந்து அடி அகலத்திற்கு மணல் திட்டு சேர்ந்து உள்ளது. அதை அகற்றுவது இல்லை. இதனால் சாலையில் பெரிய வாகனங்கள் புழுதிய பரப்பிக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.அதன் பின்னால் டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்களில் மண் பறந்து வந்து விழும் போது அதனை துடைத்து கொள்ள வாகன ஓட்டிகள் முயற்சிக்கும் பொழுது ஏற்படும் தடுமாற்றத்தால் விபத்து அதிகம் நடக்கிறது.நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த தேசிய நெடுஞ்சாலை வழியே சென்று வருகின்றது.

மாதத்திற்கு பல கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யும் தனியார் நிறுவனம் சாலையை முறையாக பராமரிப்பதில்லை.மேலும் தற்போது சாலையில் ஆங்காங்கே பறித்துள்ளது இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது இதனை சரி செய்வதற்கான நிறுவனம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்று எனப்படுகிறது.

இந்த நிலையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் இறக்கத்தில் திருச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் வழியில் பெரும்பள்ளம் உள்ளது. அப்படி வரும் வாகனங்கள் பாலத்தின் இறக்கத்தில் வரும் போது அந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் கீழே விழும்போது பின்னால் வரும் வாகனங்கள் வராமல் இருக்கும்போது பிரச்னை இல்லை.

பின்னால் வரும் வாகனங்கள் இறக்கத்தில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வருகிறது. அப்படி வரும் வாகனங்கள் முன்னால் சென்று விபத்துக்குள்ளாபவர்கள் மீது மோதியோ அல்லது ஏறி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.இதனால் உயிர் பலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலத்திலுள்ள பள்ளத்தை சரி செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: