பதுக்கப்படும் கொரோனா மருந்துகள்; கள்ளச்சந்தையில் விற்கப்படும் போலி ரெம்டெசிவர் மருந்துகள்!: பொதுமக்கள் அதிர்ச்சி..!!

மும்பை: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பதும் போலி மருந்துகள் விற்கப்படுவதும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதேபோன்று போலியான ரெம்டெசிவர் மருந்து விற்கப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாராமதி பகுதியில் போலி மருந்துகளை விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அரசு மருத்துவமனைகளில் வார்டுபாயாக பணிபுரியும் 4 பேரும் அங்கிருந்து ரெம்டெசிவர் பாட்டில்களை எடுத்து வந்து அதில் பாராசிட்டமல் மாத்திரையை தண்ணீரில் கலந்து கொரோனா மருந்து என விற்றது தெரியவந்தது. அதேபோன்று கொரோனா மருந்துகளை பதுக்கியதாகவும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாமனி மையமாக கொண்டு செயல்படும் மருந்து நிறுவனம் ஒன்று கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கியதாக எழுந்த புகாரை அடுத்து அந்த நிறுவன அதிகாரிகளை குராஜாத் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மருத்துவமனை செவிலியர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 ரெம்டெசிவர் தடுப்பூசி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மருந்து குப்பிகளில் ஒன்று போலியானது என்பது தெரியவந்தது.

Related Stories:

>