முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி: 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற உள்ளார் என தகவல்..!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு கட்ட பிரச்சாரங்களை மேற்கொண்டதற்கு பின்பும் சென்னை திரும்பி கொரோனா தடுப்பு நடவடிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஆலோசனையில் முதல்வர் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தார். அப்போது இருந்தே அவர் லேசாக சோர்வாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாகவே உடல் சோர்வின் காரணமாக இருந்த நிலையில் இன்று காலை வயிற்று வலி சற்று அதிகமானதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சை பெறுவதற்காக சென்னை நுங்கம்பாக்கம் அருகாமையில் இருக்க கூடிய எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு 3 நாள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக மருத்துவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சை தொடர்பாக தற்போது பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. பரிசோதனை நிறைவு பெற்ற பிறகு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அமைந்தகரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன் நடந்த பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: