ரெம்டெசிவிர் மருந்துக்காக வங்கதேசத்தை எதிர்நோக்கும் இந்தியா: மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நிலை மாறிப்போன அவலம்..!

ஜார்கண்ட் : கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு எதிரொலியாக வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசை ஜார்கண்ட் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் தாக்கி வரும் உருமாற்ற கொரோனா வைரசின் 2வது அலை, கணிக்க முடியாத அளவுக்கு அதிேவகத்தில் பரவி வருகிறது. இதனால், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் பலி, பாதிப்பு எண்ணிக்கைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதற்கிடையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அவசியமாக தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால், இறப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை கட்டுப்படுத்த, ரெம்டெசிவர் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், ரெம்டெசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு எதிரொலியாக வங்கதேசத்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்குமாறு மத்திய அரசை ஜார்கண்ட் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 2 வாரங்களிலுள் ஜார்கண்டுக்கு 76,640 ரெம்டெசிவிர் மருந்து தேவைப்பட்ட நிலையில் வெறும் 8,038 மருந்துகள் மட்டுமே கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நிறுவனங்களில் இருந்து தேவையான அளவு ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் சர்வதேச நிறுவனங்களை நாடியதாக அவர் கூறியுள்ளார். தேடுதலின் முடிவில் வங்க தேசத்தில் இருந்து 50,000 ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்க ஜார்கண்ட் அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கு மத்திய அரசு உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் ஹேமந்த் சோரன் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: