×

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்..!! பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் கொரோனா பரவாத வண்ணம் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் நேற்று நாளில் 10 ஆயிரத்தை எட்டிய நிலையில் நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதியில்லை . வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு இரவில் தடை, அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு இருக்கும் காலங்களில் பகல் நேரங்களில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா பரவாத வண்ணம் ஆம்னி பேருந்துகளில் ஒவ்வொரு முறையும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்துகளை காக்க ஆறு மாதங்களுக்கு 50% சாலை வரியை மட்டும் வசூலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Omni Buses ,Omni Bus Owners Association , No night curfew in Tamil Nadu tomorrow .. !! Daytime Additional Omni Buses Movement: Omni Bus Owners Association Announcement
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...