×

அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 14.18 கோடியாக உயர்வு..! உயிரிழப்பு எண்ணிக்கை 30.32 லட்சத்தை தாண்டியது

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 30,32,205 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14,19,86,991 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,05,16,008 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,07,425 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.18 கோடியைத் தாண்டியது.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : Corona virus spreads at breakneck speed: Global number of infections rises to 14.18 crore The death toll has crossed 30.32 lakh
× RELATED நுரையீரலை பாதிக்கும் நோய் மட்டுமல்ல......