×

சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு

சேலம்: சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள கணேஷ் கல்லூரி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், சேலம் தெற்கு, ஏற்காடு மற்றும் வீரபாண்டி ஆகிய 3 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்களும், வளாகத்தில் ஆயுதப்படை போலீசாரும், நுழைவாயிலில் மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். வேட்பாளர்களின் சார்பில் முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று, ஏற்காடு தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை முன்பு, பாதுகாப்பு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், வெகுநேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறை அருகே செல்போன் உள்பட எந்தவித மின்சாதன பொருட்களையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால், பாதுகாப்பு பணியில் உள்ள சிஆர்பிஎப் வீரர் செல்போன் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திமுக சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராமனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், அந்த வீரர் உடனடியாக வேறு பணிக்கு மாற்றப்பட்டார். அத்துடன், வீரர்கள் யாரையும் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது. செல்போனுடன் வந்தால் அதனை பறிமுதல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Salem ,CRPF , Salem, Yercaud, voting machine, CRPF player, job change
× RELATED சேலத்தில் வெயிலில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் போலீசார் விசாரணை..!!