×

தமிழகத்தில் இருந்து வந்தால் நெகட்டிவ் சான்று கட்டாயம்: கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில்  தற்போது கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மிக அதிகமாக 13 ஆயிரத்து 835 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. திருமணங்கள் உள்ளி ட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு நேற்று கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதோடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் ெநகட்டிவ் சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி இரண்டு முறை போட்டு கொண்டவர்களும் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும். பரிசோதனை நடத்தாமல் வருபவர்கள் கேரளாவுக்கு வந்த 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமையில் இருக்க வேண்டும். பரிசோதனை செய்ய விரும்பாதவர்கள் கேரளா வந்த பின்னர் 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும். கேரளா வருபவர்கள் கோவிட் 19 கேரளா ஜாக்கிரதா இணைய தளத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Negative Certificate Mandatory, Government of Kerala
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...