×

மே. வங்கத்தில் ராகுலின் பிரசார கூட்டங்கள் ரத்து: மற்ற தலைவர்களுக்கும் அழைப்பு

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவை தொகுதிகளில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்டங்களாக மொத்தம் 180 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து விட்டது. 6வது கட்டமாக வரும் 22ம் தேதி 43 தொகுதிகளிலும், 7வது கட்டமாக 26ம் தேதி 36 தொகுதிகளிலும், 29ம் தேதி 8வது கட்டமாக 35 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அரசியல் தலைவர்களின் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது.

 இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தினசரி புதிய பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் நிலவி வருவதால், மேற்கு வங்கத்தில் நடக்க இருந்த தனது பிரசார கூட்டங்கள் அனைத்தையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மேற்கு வங்கத்தில் எனது அனைத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்துள்ளேன். அனைத்து அரசியல் தலைவர்களும் இது போன்ற சூழலில் பொதுக்கூட்டம் நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து யோசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,’ என கூறியுள்ளார்.



Tags : Rahul , Rahul, cancellation of campaign meetings, chairman
× RELATED சொல்லிட்டாங்க…