திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு வாலிபர் தற்கொலை முயற்சி

பெரம்பூர்: வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 5வது தெரு வைச் சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்திகேயன் (21) இவருக்கு சமீபகாலமாக உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கை போன்று செயல்பட்டு வந்துள்ளார். பலமுறை பெற்றோர்கள் இவரை கண்டித்துள்ளனர். இதனால் கார்த்திகேயன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோருக்கும் கார்த்திகேயனுக்கும்  இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் நான் திருநங்கைகளுடன் செல்ல இருக்கிறேன், என தெரிவித்துள்ளார்.

இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் கழிவறை சுத்தம் செய்ய வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார். மேலும் கத்திரிக்கோலால் தனது வயிற்றில் குத்திக் கொண்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பெற்றோர் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories:

>