செல்போனை பறித்து அடைத்து வைப்பு பின்னலாடை நிறுவனத்தில் 19 பெண் தொழிலாளர் மீட்பு

திருப்பூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 19 பெண்கள் பின்னலாடை நிறுவன பயிற்சிக்காக திருப்பூர் 15. வேலம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பின்னலாடை நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்தனர். கடந்த மாதம் பயிற்சி முடிந்த நிலையில் அவர்கள் வேறு நிறுவனத்திற்கு பணிக்கு சேர செல்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பின்னலாடை நிறுவனம், அந்த வட மாநில பெண் தொழிலாளர்களை தனி அறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் அந்த நிறுவனத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 பெண் தொழிலாளர்களையும் மீட்டனர்.

Related Stories:

>