போக்குவரத்து துறையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் சவால்: தீர்வு காண லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

சென்னை: போக்குவரத்துத் துறையில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் உள்ள சவால்களை நீக்க புதிதாக அமையும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துதல், ஓட்டுனர் உரிமம் பெறுதல், புதுப்பிக்க, வாகனம் பதிவு செய்ய, புதுப்பிக்க, பெர்மிட் பெற, வாகன விபத்துகளை ஆய்வு செய்ய, வாகன தணிக்கையின் போது ஏராளமான சவால்களை சந்திக்கிறோம். அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. போக்குவரத்து துறையை தூய்மைப்படுத்த புதிய அரசு காலதாமதம் செய்யும் பட்சத்தில் ஜூன் முதல் வாரத்தில் ஆட்டோ, மினி ஆட்டோ, கால் டாக்ஸி, பள்ளி வாகனங்கள், அனைத்து லாரிகள், அத்தியாவசிய  பொருட்கள் வாகனங்கள் என அனைத்து வாகனங்களையும்  நாங்களாகவே ஆங்காங்கே நிறுத்திக்கொண்டு தொடர் வேலை நிறுத்திலும், தொடர் போராட்டங்களிலும் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>