சிறை தண்டனையை அனுபவிக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி கொரோனாவால் பலி: தேர்தலில் போட்டியிட்ட நிலையில் சோகம்

லக்னோ: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட நிலையில், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுவரும் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி கொரோனாவால் மரணம் அடைந்தார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் யாதவின் மனைவி பிரியங்கா சென்னுக்கு ெகாரோனா அறிகுறி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இவர், அயோத்தியின் ஹாரிங்டன்கஞ்ச் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக பிரியங்கா சென் பேட்டியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ‘ஐபிஎஸ் அதிகாரியான அரவிந்த் யாதவ், கால்நடை பராமரிப்பு ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது மனைவியான பிரியங்கா சென் ஹாரிங்டன்கஞ்ச் மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு பிரசாரம் செய்தார். ஆனால், முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 15ம் தேதி நடைபெற்ற நிலையில் அவர் இறந்துவிட்டார்’ என்றனர்.

Related Stories: