தமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஆய்வு: ஆந்திர மாநிலம் நகரி ஆற்றில் ரூ17.86 கோடியில் தடுப்பணை

திருவள்ளூர்: நகரில் ஆற்றில் கட்டப்பட்டுவரும் தடுப்பணை பணிகளை தமிழக அரசின் சிறப்பு செயலாளர் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்–்டம் திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் இலுப்பூர் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களில் நிலத்தடி நீரை உயர்த்தும் வகையிலும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும் ஆந்திர மாநிலம் நகரி ஆற்றின் குறுக்கே ரூ.17.86 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 230 மீட்டர் நீளத்தில் 2 மீட்டர் உயரத்தில் இந்த தடுப்பணை கட்டப்பட உள்ளது. தடுப்பணை கட்டிமுடித்தால் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நிலத்தடி நீர் உயர்வதுடன் சுமார் 30 மில்லியன் கன அடி நீர் தேக்கி வைக்க முடியும்.

இதன்மூலம் 295 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.இந்த நிலையில், தடுப்பணை கட்டும் பணியினை தமிழக அரசின் சிறப்பு செயலாளர் டி.ரவிந்திரபாபு, பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஜி.பொன்ராஜ், பாலாற்று வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஏ.முத்தையா ஆகியோர் ஆய்வு செய்து, பணிகளை விரைந்துமுடிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின்போது கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், உதவி பொறியாளர் பி.ஜி.கவுரிசங்கர்,

ஆர்.லோகரட்சகன் மற்ற மற்றும் தடுப்பணை கட்டும் ஒப்பந்ததாரர், பொதுப்பணித் துறை அலுவலர்கள், ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

Related Stories:

>