செல்போனில் பேசுவதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை: வில்லிவாக்கத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை வில்லிவாக்கம், பாரதி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ெஜகதீசன் (47). இவரது மகள் கீர்த்திகா (20). இவர், அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பில் கீர்த்திகா கவனம் செலுத்தாமல், நாள்தோறும் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்ததும் கீர்த்திகாவின் தாய், செல்போனில் நண்பர்களுடன் அரட்டையடிப்பதைவிட்டு, ஆன்லைன் வகுப்புகளில் கவனம் செலுத்து என கண்டித்து வந்திருக்கிறார். இதில் மனமுடைந்த கீர்த்திகா, நேற்று மாலை அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் வில்லிவாக்கம் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கீர்த்திகாவின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>